தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் 1974-ம் ஆண்டு ஜூன் திங்கள் 13ம் நாளிலிருந்து திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு காகிதத் தொழிற்சலைகளுக்கு தேவைப்படும் மரங்களை வளர்த்து, பராமரித்து, தேவையைப் பூர்த்தி செய்து, வருமானம் ஈட்டும் நோக்கோடு நிறுவப்பட்டது. இதற்காக இக்கழகத்திற்கு 71540.50 ஹெக்டேர் பரப்புள்ள காப்புக்காடுகளை வனத்துறையிலிருந்து குத்தகை அடிப்படையில் அரசு ஒதுக்கி தந்துள்ளது. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்திற்கு அரசு நிர்ணயிக்கும் தொகையினை இக்கழகம் குத்தகைக் கட்டணமாக செலுத்தி வருகிறது. 1990-91ம் ஆண்டு முதல் 1995-96ம் ஆண்டு வரை முந்திரித் தோட்டப்பகுதிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.800.00 வீதமும், பிறப்பகுதிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.400.00 வீதமும் குத்தகைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 1996-97ம் ஆண்டிலிருந்து இக்கழக்த்திற்கு கிடைக்கும் மொத்த ஆண்டு வருவாயிலிருந்து 30% குத்ததைக்கட்டணம் என அரசால் நிர்ணயிக்கப்பட்டு, செலுத்தப்பட்டு வருகிறது. இக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட இந்நாள் வரைக்குண்டான மூலதனம் ரூ.10.00 கோடிகள் வழங்கப்பட்ட செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.5.64 கோடிகள்.
|